உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிரேக் பிடிக்காத அரசு பஸ் லாரியில் மோதி 21 பேர் காயம்

பிரேக் பிடிக்காத அரசு பஸ் லாரியில் மோதி 21 பேர் காயம்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து நேற்று காலை பார்த்திபனுார் வழியாக வீரசோழன் கிராமத்திற்கு, அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 10:15 மணிக்கு கமுதக்குடி அருகே முன்னால் டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, திடீரென நின்ற நிலையில், பின்னால் வந்த டவுன் பஸ்சை நிறுத்த டிரைவர் முயன்றார். பிரேக் பிடிக்காததால், டிப்பர் லாரியின் பின்புறத்தில் பலமாக பஸ் மோதியது.இதில், பஸ்சின் முன் பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. டவுன் பஸ் டிரைவர் தங்கம், 48, இரு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை