உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜமாபந்தியில் பெறப்பட்ட 228 கோரிக்கை மனுக்கள்

ஜமாபந்தியில் பெறப்பட்ட 228 கோரிக்கை மனுக்கள்

71 பட்டா மாறுதல் மனுக்களுக்கு தீர்வுபரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 228 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் 71 பட்டா மாறுதல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.பரமக்குடியில் ஜூன் 11ல் ஜமாபந்தி துவங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி தலைமை வகித்தார். தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். ஜூன் 11 முதல் 20 வரை மஞ்சூர், நயினார்கோவில், பரமக்குடி, கிளியூர், பார்த்திபனுார் பகுதிகளுக்கு உட்பட்ட மக்களிடமிருந்து 228 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.இதன்படி இலவச வீட்டு மனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், கணினி மற்றும் யு.டி.யார் திருத்தம், நில அளவை, முதியோர் உதவித்தொகை கேட்டும் மனுக்கள் வரப் பெற்றன.இதில் முக்கியமாக 71 பட்டா மாறுதல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தாசில்தார் சாந்தி தெரிவித்தார்.தொடர்ந்து வரும் நாட்களில் அனைத்து மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பல்வேறு துறை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., தலையாரி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ