மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
15 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
15 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
15 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
15 hour(s) ago
கீழக்கரை : நடப்பாண்டில் எதிர்பார்த்த பருவ மழை பெய்ததால் கண்மாய், குளம், ஊருணிகளில் நீர் நிரம்பியதால் கண்மாய் பாசனத்தில் 2ம் போக நெல் சாகுபடி நடக்கிறது.பிப்., மாதம் முதல் கட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டு பின் அறுவடை செய்யப்பட்டது. அதன் பிறகு கோடை உழவாக நிலத்தை விவசாயிகள் உழவு செய்தனர். கண்மாயில் எதிர்பார்த்த தண்ணீர் இருந்ததால் அதனை பயன்படுத்தி மீண்டும் நெல் விளைவித்தனர்.இதையடுத்து 110 நாள் பயிராக உள்ள நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில்உள்ளது. விவசாயிகள் கூறியதாவது:களரி, மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் பாசனம் மூலமாக விவசாயிகளுக்கு நெற்பயிர்கள் ஓரளவுக்கு பலன் தந்துள்ளது. இரண்டாம் கட்ட சாகுபடியாக நெல், பருத்தி, மிளகாய், மல்லி சாகுபடி செய்துள்ளோம்.சமீபத்தில் பெய்த கோடை மழையும் இதற்கு கை கொடுத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் கட்ட சாகுபடி செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago