| ADDED : ஜூலை 31, 2024 06:12 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (ஜூலை 31) முதல் ஆக.3 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் ஊரகம் பகுதி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கீழ நாகாச்சி பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி ஜூலை 31 முதல் ஆக.3 வரை நடக்கிறது.இதையடுத்து இருமேனி, மாந்தோப்பு, குப்பாணி வலசை, சாலை தோட்டம், கடுக்காவலசை, பிரப்பன் வலசை, காஞ்சியப்பன் நகர், நொச்சியூரணி, அரியமான் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.