மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
4 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
4 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
4 hour(s) ago
பரமக்குடி : -மதுரை துவங்கி மானாமதுரை, பரமக்குடி பகுதி களில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் நிலையில் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் முடிந்துள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடக்க உள்ளதால் மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதற்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன்படி ஏப்.2 முதல் 12க்குள் அனைத்து தேர்வுகளும் நடக்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்ய பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10ல் நடக்க உள்ள அறிவியல் தேர்வு 22க்கும், ஏப்.12ல் நடக்கும் சமூக அறிவியல் தேர்வு 23 ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுரை அழகர் கோயிலில் இருந்து புறப்படும் சுந்தரராஜ பெருமாள் 'கள்ளழகர்' திருக்கோலத்தில் ஏப்.23 காலை குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.இதேபோல் பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் ஏப்.22, 23 ம் தேதிகளில் சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடக்கிறது.அப்போது மூன்று மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் நேர்த்தி கடன்களை செலுத்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மூன்று ஊர் விழாக்களிலும் பங்கேற்க உள்ளனர்.இதனால் ஒட்டுமொத்தமாக மாணவர்களுடன் மட்டுமல்லாது பெற்றோரும் விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்பதால் நிச்சயமாக நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என விரும்புவர்.இதனால் பல ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். ஆகவே பள்ளிக் கல்வித்துறை அனைத்தையும் ஆராய்ந்து தேர்வு தேதியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago