உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 500 குடும்பங்களை ஒதுக்கிவிட்டு கோயில் விழா நடத்த ஏற்பாடு கலெக்டரிடம் புகார்

500 குடும்பங்களை ஒதுக்கிவிட்டு கோயில் விழா நடத்த ஏற்பாடு கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம்: கடலாடி தாலுகா எஸ்.தரைக்குடியில் உமையநாயகிஅம்மன் கோயில் விழாவில் 500 குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிலர் அரசு அனுமதியின்றி வடமாடு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சாயல்குடி அருகே தரைக்குடியை சேர்ந்த எம்.பெத்துராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:எஸ்.தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயில் 9 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்வாகத்தில் உள்ளது. சுழற்சி முறையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்கப்படுகிறது.இவ்வாண்டு இந்த நடைமுறையை மாற்றி சிலர் தன்னிச்சையாக 500 குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் கோயில் விழா, வடமாடு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒதுக்கிவைத்த சமூக மக்களை ஒன்று சேர்த்து வரி வாங்க வேண்டும். சுழற்சி முறையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை