உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 

வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே பொந்தம்புளியை சேர்ந்த இருகால்களை இழந்த மாற்றுத்திறனாளி சண்முகவேல் 35, வீடுகட்ட அரசு உதவி கேட்டு 4 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு அலைவதாக புகார் தெரிவித்துள்ளார்.ராமாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கைகளில் காலணி அணிந்து மனுஅளிக்க தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி சண்முகவேல் கூறியதாவது: 8ம் வகுப்பு வரை படித்து கம்ப்யூட்டர் முடித்துள்ளேன். திருமணமாகிவிட்டது. 4 ஆண்டுகளாக வீடுகட்ட அரசு உதவிகேட்டு அலைகிறேன். இந்நிலையில் எனக்கு அரசு வழங்கிய டூவீலர் அடிக்கடி பழுதாகி விடுவதால் செலவு செய்ய முடியவில்லை. பழ வியாபாரத்திற்கு செல்ல சிரமப்படுகிறேன். எனவே எனக்கு புதிய டூவீலர் வழங்கவேண்டும்.வேலைவாய்ப்பு, வீடுகட்டுவதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை