உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளாக இருக்கும் உயர்மின் கோபுரம் விளக்கு

காட்சிப்பொருளாக இருக்கும் உயர்மின் கோபுரம் விளக்கு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் காட்சிப்பொருளாக உள்ள உயர்மின் கோபுரம் விளக்குகளால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் - -பரமக்குடி சாலை கீழக்கன்னிச்சேரி பஸ் ஸ்டாப் அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் விளக்குகள் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் தற்போது உயர்மின் கோபுரம் விளக்குகள் எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் இருள் சூழ்ந்து இருப்பதால் காத்திருக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பராமரிப்பு இன்றி இருக்கும் உயர்மின் விளக்குகளால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே உயர்மின் கோபுர விளக்குகளை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ