மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது
22 minutes ago
கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு
34 minutes ago
வியாபாரிகள் கோரிக்கை
1 hour(s) ago
விழிப்புணர்வு முகாம்
1 hour(s) ago
விலையில்லா சைக்கிள் வழங்கல்
1 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடகோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா மே 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடைபெறுவது வழக்கம்.கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தன. விழாவின் தொடர்ச்சியாக மே30ல் பூத்தட்டு விழா நடந்தது. இந்த நிலையில் முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து விழாக் குழு தலைவரும், சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும்நிதிக் குழு தலைவருமான தனசேகரன் தலைமையில் பக்தர்கள் 2 கி.மீ., தொலைவு மங்கல இசை முழங்க காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு மூலவருக்கு நடைபெற்ற பாலபிஷேகத்திலும், சிறப்பு தீபாராதனையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
22 minutes ago
34 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago