உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ரோடு போட்டாச்சு.. வாறுகால் கட்டுவது எப்போது... மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

பரமக்குடியில் ரோடு போட்டாச்சு.. வாறுகால் கட்டுவது எப்போது... மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில் ரோடுகள் புதுப்பிக்கப்படும் நிலையில் கழிவு நீர் வாறுகால் கட்டப்படாமல் உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் செய்யும் நிலை உள்ளது.பரமக்குடியில் உள்ள 36 வார்டுகளிலும் தார் ரோடு, சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பல தெருக்களில் பணிகள் நடக்க உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளாக ரோடு மட்டுமே அமைக்க டெண்டர் விடப்படும் நிலையில் வாறுகால் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுவாக நகர் கட்டமைக்கப்படும் போது மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வெளியேற வசதி ஏற்படுத்துவது அவசியம். இதன்படி பரமக்குடியில் பிரதான தெருக்களில் வாறுகால் முறையாக இருந்தது. தற்போது விரிவுபடுத்தப்படும் பகுதிகளில் வடிகால் வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. மேலும் பல்வேறு தெருக்களில் வாறுகால் கட்டுவதை நகராட்சி மறந்துவிட்ட சூழலில் ரோடு மட்டும் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறி விபத்திற்குள்ளாகின்றனர்.புதிய கட்டுமானங்களை உருவாக்குவோர் ஆக்கிரமிக்கும் நிலையும் அதிகரித்துள்ளது.நகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆண்டு முழுவதும் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையில் தவிக்கும் நிலை உள்ளது.மழை நேரங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி பல மணி நேரம் வரை ரோடுகளில் தேங்குவதுடன் வீடுகளிலும் புகுகிறது.எனவே போர்க்கால அடிப்படையில் பரமக்குடி நகராட்சியில் உள்ள அனைத்து வாறுகால்கள் மீதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அதனை புதிதாக கட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை