மேலும் செய்திகள்
56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரை இலங்கையில் பறிமுதல்
1 hour(s) ago
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது
1 hour(s) ago
ராமநாதபுரம் : -திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்தவர் பஞ்சா. இவரது மகன் மதன்குமார் 20. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அருண்குமார் 22, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணு பூங்கா பகுதியில் வந்த போது ரோட்டை திடீரென் மாடு கடந்ததால் அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் துாக்கி வீசப்பட்ட மதன்குமார் உயிரிழந்தார்.உடன் வந்திருந்த அருண்குமார் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாடும் சம்பவ இடத்தில் இறந்தது. ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago