மேலும் செய்திகள்
ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் இருப்பு இல்லை
14-Nov-2024
ராமநாதபுரம்: ரேஷனில் பெயர் நீக்கம் செய்யும் போது ஏற்படும் குளறுபடியால் ஆதார் அடையாள அட்டை முடக்கப்படும் நிலையில் சரி செய்ய 2 முதல் 3 மாதங்கள் வரை தாமதம்ஏற்படுவதால் மாணவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.இ-சேவை மையத்தில் இறந்தவர் பெயர் நீக்கம் மற்றும் புது ரேஷன்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெயர் நீக்கம் செய்வதற்குபதில் குடும்பத்தில் வேறு நபவரின் பெயரை தவறுதலாகநீக்கம் செய்யும் போதுஅவர்களது ஆதார் கார்டும்முடக்கப்படுகிறது.இப்பிழையை சரிசெய்ய தாலுகா, மாவட்ட வழங்கல் துறை அலுவலகங்களில்மக்கள் மனு அளிக்கின்றனர். அவர்கள் உண்மை தன்மையைஆய்வு செய்து பிழையை சரி செய்ய உணவுப்பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னைஆணையர் அலுவலகத்தில் பரிந்துரை செய்யப்படுகிறது.அங்கிருந்து சரி செய்வதற்கு 2 முதல் 3 மாதங்கள் வரைகாத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும் ரேஷனில் பெயர் நீக்கம் குளறுபடியால் ஆதார் கார்டுமுடக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே தொய்வு இல்லாமல் பெயர் நீக்கத்தின் போது ஏற்படும் குளறுபடியால் முடங்கியுள்ள ஆதார் கார்டுகளை உடன் சரிசெய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.இதுகுறித்து வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில்,ரேஷன் கார்டுகளில் பிழை திருத்தம் அனுமதி மாவட்டவழங்கல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்ஆதார் கார்டு முடக்கத்தை சரிசெய்ய சென்னை ஆணையர்கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களது அனுமதி பெற வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது என்றனர்.
14-Nov-2024