உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் பேட்டி

பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் பேட்டி

ராமேஸ்வரம், ''ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்,'' என, ராமேஸ்வரத்தில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்தார்.ராமேஸ்வரம் பேக்கரும்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் அவரது நினைவு நாளையொட்டி நேற்று ஜமால் சித்திக் அஞ்சலி செலுத்தினார்.பின் அவர் கூறியதாவது: அப்துல் கலாமின் லட்சியம், சிந்தனைகளை ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பின்பற்றி வருவதால் பொருளாதார பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும். மேலும் அப்துல் கலாம் பிறந்த நாள், நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் இங்கு வந்து அஞ்சலி செலுத்தி அவரது புகழை போற்ற வேண்டும். தமிழக பள்ளிகளில் அமல்படுத்திய காலை உணவு திட்டத்திற்கு அப்துல்கலாம் பெயரை மாநில அரசு சூட்ட வேண்டும் என்றார்.பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பார்வையாளர் முரளிதரன் உடனிருந்தனர்.அப்துல் கலாம் பேரன் ேஷக் சலீம் கூறியதாவது: இங்கு அறிவுசார் மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விண்வெளி, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் பயனடைவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை