உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன் வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை 

மீன் வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை 

ராமநாதபுரம், : -பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா கடல் சார்ந்த 6 மாவட்டங்களில் மீன் பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தாத மீன் வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளனர்அவர் கூறியிருப்பதாவது: மீன் பிடி அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற விசைப்படகுகளை தடுக்க வேண்டிய மீன் வளத்துறை வேடிக்கை பார்த்தது. கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப்பிரிவு என அனைத்து நிர்வாகங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.இது குறித்து தமிழக அரசும், மீன் வளத்துறையும் உரிய தலையீடு செய்ய வேண்டும். முதல் கட்டமாக தமிழக அரசின் மீன் ஒழுங்குமுறை சட்டத்தை 6 மாவட்டங்களில் அமல்படுத்த தவறிய மீன் வளத்துறை அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத மீன் பிடிப்புகளுக்கு ஆதரவாக மீன் வளத்துறையில் நெருக்கடி ஏற்படுத்தும் ஆளும் கட்சியின் அரசியல் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ