உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் 'ஹெல்மெட்' அணியாமல் டூவீலரில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் போலீஸ்காரர்களுக்கு கூறியுள்ளதாவது: ஆயுதப்படை, கமுதி ஆயுதப்படை ஆகிய இருவளாகங்களிலும் வாகனங்களில் வரும் போலீசார் கண்டிப்பாகஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஏனென்றால் விபத்தில் 4 போலீசார்பலியாகியுள்ளனர். ெஹல்மெட் அணியாதவர்களை ராமநாதபுரம், கமுதிஆயுதப்படைக்குள் அனுமதிக்க கூடாது. போலீசாரே விதிகளை மதிக்கவில்லை என்றால் எப்படி. அப்படி ெஹல்மெட் அணியாமல் வாகனங்களில் வரும்போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ஒழுங்கு போலீசார் 'ஹெல்மெட்' அணிவதில்லை என்ற குற்றறச்சாட்டு உள்ளது.ஆயுதப்படை குடியிருப்புகளில் இருப்பவர் என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வீடு காலி செய்யப்படும். எனவே போலீசார் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக போக்குவரத்து விதிகளைபின்பற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை