உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட் அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மின் கட்டணம் உயர்வு, ரேஷனில் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்துஅரிக்கேன் விளக்குகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர்ராஜா முன்னிலை வகித்தனர். அரிக்கேன் விளக்குகளை ஏந்தி 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர். ராமநாதபுரம் ராம்கோ சேர்மன்(பொ) தஞ்சி சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை