உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிப்பதற்கு பதநீர் வழங்கி வரவேற்ற முன்னாள் மாணவர்கள் இயற்கை பானத்திற்கு மவுசு

குடிப்பதற்கு பதநீர் வழங்கி வரவேற்ற முன்னாள் மாணவர்கள் இயற்கை பானத்திற்கு மவுசு

சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995 முதல் 1999ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் தொழில் முனைவோராகவும் உள்ளனர். கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நரிப்பையூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடந்தது.விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களுக்கு இயற்கை பானமாக விளங்கும் பதநீரை பனை ஓலையில் ஊற்றி அவர்களை பருகச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:பள்ளியில் படித்த மலரும் நினைவுகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.அக்காலங்களில் பயின்ற சுவாரசியமான சம்பவங்களை அசைபோட்டு ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தோம்.செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கக்கூடிய பதநீரை விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பனை ஓலை பட்டையில் வழங்கி வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை