உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது ஒழிப்பு, தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

மது ஒழிப்பு, தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மது விலக்கு போலீஸ் சார்பில் மது ஒழிப்பு மற்றும் தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கமுதி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் லலிதா, கிராம தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். பள்ளியிலிருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் மாணவர்கள்,பொதுமக்கள் கையில் விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.மது,போதைப் பொருளால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் டூவீலரில் செல்லும் போது தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். பின் வீடுகளில் பெற்றோர், உறவினர்கள் யாரேனும் மது அருந்தினால் அவர்களை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.உடன் சேதுசீமை பட்டாளம் வீரர்கள், இளஞ்சை இளையோர் இயக்கம், கிராம மக்கள், போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை