உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை

பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை

பெரியபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுக்கப்பட்டது. பெரியபட்டினத்தில் குதிரை மலையான் கருப்பண்ண சுவாமி, சத்தீஸ்வரி கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோயில் உள்ளது. இங்குள்ள அரச மரத்தடியில் பல ஆண்டுகளாக வெளியே தெரியாத நிலையில் 3 அடி நீள அகலம் கொண்ட பாறையில் வடிக்கப்பட்ட சிலை புதைந்த நிலையில் இருந்துள்ளது.சிவராத்திரி விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் தரையில் புதைந்திருந்த வெள்ளை பாறையை புரட்டி போட்ட போது அது திருமால் சிலை என தெரிந்தது. மரத்தின் அடியில் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பெரியபட்டினம் பகுதி மக்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கிணறு தோண்டிய போது கிடைத்த திருமால் சிலை தான் இது. நீண்ட கிரீடத்துடன், காதுகளில் மகர குண்டங்களுடன் சிலை உள்ளது. இடுப்பில் இருந்து பாதம் வரையிலான பகுதி இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டால் சிலை குறித்த பிற விபரங்கள் தெரியவரும் என்றனர்.ஏற்கனவே பெரியபட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கப்பெற்ற புத்தர், மகாவீரர் சிலைகள் அரசு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை