உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரியநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா

அரியநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா

சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.டி.சேதுராஜபுரத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.முன்னதாக யாகசாலை பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாவாஜனம், கும்ப ஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகளும் பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பம் புறப்பாடு செய்து கோயில் விமான கலசத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர் விநாயகர், முருகன், சிவன், பெருமாள், சப்த கன்னிகள் பதினெட்டாம்படி கருப்பணசாமி, நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை