உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் கவனம்: டி.எஸ்.பி. அறிவுரை 

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் கவனம்: டி.எஸ்.பி. அறிவுரை 

திருவாடானை : சமூக வலைதளங்களை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதால் போக்சோ வழக்குகள் அதிகரிக்கிறது. பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கூறினார்.அவர் கூறியதாவது: பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். தேவையில்லாமல் தங்கள் புகைபடம் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருவாடானை சப்-டிவிசனில் உள்ள ஒரு கிராமத்தில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாலிபர் இணையத்தில் பழகினார். அவரை ஆபாச படம் எடுத்து சிலர் மிரட்டினர். அவர்கள் மீது போக்சோ வழக்குபதிவு செய்து 7பேர் கைது செய்யபட்டனர். இச் சம்பவம் அப் பெண்ணுக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட இடைவெளியே காரணம். இதை அந்த வாலிபர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். எனவே பெண்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை