மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு
திருவாடானை : பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.திருவாடானை வட்டார வள மையத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் மஞ்சூர் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்நிகழ்ச்சி இரு நாட்கள் நடந்தது. திருவாடானை எஸ்.ஐ., சித்ராதேவி, சமூக நல மேம்பாட்டு அலுவலர் ஜஸ்டின், வட்டாரக் கல்வி அலுவலர்கள் புல்லாணி, ஆரோக்கியசாமி கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக ஆறுமுகம், மாரி செயல்பட்டனர். இந்த பயிற்சியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைபுரிந்து கொள்ளுதல், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள போக்சோ போன்ற சட்டங்களை தெரிந்து கொள்ளுதல், குழந்தைகள்மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தல் போன்ற பல வகைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறுவன நுாலகர் பாரதிராஜா நன்றி கூறினார்.