மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
கீழக்கரை; கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விடப்படுகிறது.நேற்று காலை 6:00 மணிக்கு 127 ஆலிவர் ட்ரீ எனும் ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை மன்னார் வளைகுடா வன உயிரின காப்பகம் சார்பில் வாலிநோக்கம், சீலா மீன் பாடு, பம்பு ஹவுஸ், மேலமுந்தல் அருகே இதற்கான பிரத்தியேகமாக குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டிருந்தது.கடலின் தகவமைப்பில் ஆமைகளின் பங்கு முக்கியமானதாகும். இது குறித்து கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வனச்சரகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.