உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் தரம், அளவு: அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் தரம், அளவு: அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளின் தரம், அளவு குறித்து மீன்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழகத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில் படகுகளின் தரம் குறித்து மீன்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள 1200 விசைப்படகுகளில் அரசு விதிமுறைகளின்படி நிர்ணயித்த அளவில் குதிரை திறன் இன்ஜின் உள்ளதா, படகின் நீளம், அகலம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடிய தரத்துடன் படகு உள்ளதா என மீன்துறை அதிகாரிகள்20 பேர் குழு ஆய்வு செய்தனர். மேலும் படகு உரிமையாளர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகலை மீன்துறை அலுவலகத்தில் செலுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ