உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழையால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிப்படைந்துள்ளன.ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளான உப்பூர், சித்துார்வாடி, ஆவரேந்தல், கலங்காப்புளி, ஊரணங்குடி, செங்குடி, வரவணி, மஞ்சள் பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யும் செங்கல் சூளைகள் உள்ளன.இப்பகுதியில் தொழிலாளர்கள் மண்ணை குறிப்பிட்ட பதத்தில் பிசைந்து அச்சுகள் மூலம் செங்கல் உற்பத்தி செய்து வெயிலில் உலர்த்தி பின்பு மொத்தமாக சூளையில் அடுக்கி தீ மூட்டி செங்கல் உற்பத்தி செய்கின்றனர். பெரும்பாலும் கோடை காலத்தில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம்.இந்நிலையில் நடப்பு ஆண்டிலும், பல்வேறு பகுதிகளிலும் செங்கல் உற்பத்தியை தொழிலாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், பெரும்பாலான செங்கல் சூளைகளில் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட சுடப்படாத செங்கலை வெயிலில் உலர்த்துவதற்கு அடுக்கி வைத்துள்ளனர்.அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் சுடப்படாத செங்கற்கள் மழை நீரில் நனைந்து சேதமடைகின்றன. இதனால், செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி