உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தம்பி கொலை அண்ணன் கைது

தம்பி கொலை அண்ணன் கைது

முதுகுளத்துார்:-முதுகுளத்துார் அருகே குடும்பத்தினரிடம் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தம்பி சிவாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அண்ணன் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூர் சின்னையா மகன் சிவா 27; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் திருமணம் செய்து டைல்ஸ் வேலை செய்து வந்தார். ஊருக்கு வந்தவர் குடும்பத்தினரிடம் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று சிவா அதுபோலவே தகராறு செய்தார். அங்கு வந்த அண்ணன் கார்த்திக் 31, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் அண்ணன் , தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.முதலில் சிவா அரிவாளால் கார்த்திக்கை வெட்ட முயன்றார். அப்போது கார்த்திக் அரிவாளை பறித்து வெட்டியதில் சிவா உயிரிழந்தார். கார்த்திக்கை முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை