உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மயானம் வசதியின்றி சொந்த இடங்களில் உடல் அடக்கம்; டி.என்.குடியிருப்பு மக்கள் அவதி

மயானம் வசதியின்றி சொந்த இடங்களில் உடல் அடக்கம்; டி.என்.குடியிருப்பு மக்கள் அவதி

ராமநாதபுரம், : மண்டபம் அருகே சுந்தரமுடையான் ஊராட்சி டி.என்.குடியிருப்பு கிராமத்தில் மயான வசதியின்றி இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த இடத்தில் அடக்கம் செய்யும் நிலை உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.டி.என்.குடியிருப்பு கிராம மக்கள் ஊர்தலைவர் நாகநாதன் தலைமையில் ஊரில் மயானம் வசதி செய்து தர வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: டி.என்.குடியிருப்பு கிராமத்தில் 250 வீடுகள் உள்ளன. மயானம் வசதியின்றி யார் இறந்தாலும் அவர்களது சொந்த இடத்தில் உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. மேலும் இடவசதி இல்லாதவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே ஊருக்குள் புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து அவ்விடத்தில் மயான வசதி செய்து தர வேண்டும். இது தொடர்பாக மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமிலும் மனு கொடுத்துள்ளோம். எனவே மயான வசதி செய்து தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !