உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு

பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் சாலை பூசேரி முக்குரோடு உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதமடைந்து, மது அருந்தும் மினிபாராக பயன்படுத்துவதால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.தேரிருவேலி அருகே பூசேரி முக்குரோட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை கட்டப்பட்டது. 3கி.மீ., நடந்து வந்து கிராம மக்கள் பஸ்ஸிற்காக காத்திருந்து செல்கின்றனர். நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இரவுநேரங்களில் மது அருந்தும் மினி பாராக மாறியுள்ளது. இதனால் நிழற்குடை உள்ளே பாட்டில் உட்பட பொருட்கள் கிடப்பதால் பஸ்ஸிருக்காக காத்திருக்கும் பயணிகள் முகம் சுழிக்கின்றனர். எனவே சேதமடைந்த பயணியர் நிழற்குடை மராமத்து பணி செய்தும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை