உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 

புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 

திருவாடானை : மணிமுத்தாற்றில் செடிகள் அடர்ந்து புதர் மண்டியிருப்பதால் மழை காலத்தில் நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் எழுவன்கோட்டை கண்மாயிலிருந்து மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆறு புளியால் வழியாக திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாய்க்கு சென்று, கண்மாய் நிரம்பும் பட்சத்தில் அங்கிருந்து கலுங்கு வழியாக ஆதியூர், அரும்பூர் கண்மாய் வழியாக தொண்டி கடலை சென்றடையும் வகையில் முந்தைய காலத்தில் அமைக்கபட்டது.தற்போது ஆற்றில் சீமை கருவேல செடிகளுடன் புதர் மண்டியிருப்பதால் நீரோட்டம் தடைபடுகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்ப வாய்ப்பில்லாததால் விவசாயம் பாதிக்கபட்டுள்ளது.ஆதியூர் விவசாயிகள் கூறியதாவது: மணிமுத்தாற்றில் செடி, கொடிகள் அடர்ந்து ஆறு இருக்கும் இடமே தெரியாமல் காடு போல் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு ஓரங்களில் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது. குப்பை கொட்டபடுவதால் துர்நாற்றமாக உள்ளது. குறிப்பாக மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள பாலத்தின் இரு பக்கமும் புதர்கள் அடர்ந்துள்ளது. ஆற்றை துார்வார சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை