| ADDED : மார் 28, 2024 10:58 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டசபை தொகுதியில் வேட்பாளர்கள் இன்னும் பிரசாரத்தை துவங்காததால் தேர்தல் களம் மந்தமாக உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி(தனி), திருவாடானை, திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நேற்று வேட்பு மனு பரிசீலனை நிறைவு பெற்று பிரதான கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில் அதிகம் கவனம் செலுத்தாத நிலை உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி, அ.தி.மு.க., ஜெயபெருமாள், பா.ஜ., கூட்டணியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி டாக்டர் சந்திர பிரபா உட்பட சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.பிரதான வேட்பாளர்களில் பன்னீர்செல்வத்தை தவிர மற்றவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் சின்னங்கள் உள்ள வேட்பாளர்கள் கூட திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவங்காத நிலையில் தொண்டர்கள் புலம்புகின்றனர்.