உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருக்கலைப்பு மாத்திரை விற்றமருந்துக்கடைகள் உரிமம் ரத்து

கருக்கலைப்பு மாத்திரை விற்றமருந்துக்கடைகள் உரிமம் ரத்து

ராமநாதபுரம்:கமுதி மற்றும் கீழக்கரையில் விதியை மீறி செயல்பட்டு, டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற 2 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.பரமக்குடி மருந்துகள் ஆய்வாளர் பூமாதேவி, ராமநாதபுரம்ஆய்வாளர் பிரபு குழுவினர் கடலாடி, முதுகுளத்துார், கமுதி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம்,பரமக்குடி மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரைஆகிய இடங்களில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது கமுதியில் ஒருகடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும்,மருந்து சீட்டு பதிவேட்டை முறையாக பராமரிக்காமலும்,விற்பனை ரசீதுகள் ஏதுமின்றியும் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த மருந்துக்கடையின் உரிமம் மருந்து கட்டுப்பாட்டு துறையால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதே போல் கீழக்கரையில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்று விதி மீறி செயல்பட்ட மருந்து கடையில்இருந்த மருந்துகளை ராமநாதபுரம் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் ஆய்வாளர் பிரபு ஒப்படைத்தார். அந்த மருந்துக்கடை நிரந்தரமாக மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை