உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தற்கொலைக்கு துாண்டிய இரண்டு பேர் மீது வழக்கு

தற்கொலைக்கு துாண்டிய இரண்டு பேர் மீது வழக்கு

தொண்டி: மகன் காதலித்த சிறுமியின் பெற்றோர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டேன் என்று நீதிபதியிடம் பெண் வாக்குமூலம் அளித்ததால் தற்கொலை வழக்கு தற்கொலைக்கு துாண்டிய வழக்காக மாற்றப்பட்டது.தொண்டி அருகே நம்புதாளை கண்மாய்க்கரை குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுப்புலட்சுமி 45. இவர்களது மகன் வன்மீகநாதன் 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் திருமணம் செய்யப் போவதாக சுப்புலட்சுமிக்கு தகவல் கிடைத்ததால் ஏப். 23ல் உடலில் தீ வைத்துக் கொண்டார்.படுகாயமடைந்த சுப்புலட்சுமி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு ஏப்.28 ல் இறந்தார். அதற்கு முன் நீதிபதி முன் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் சிறுமியின் பெற்றோர் ஆனந்த், சீதா ஆகியோர் தரக்குறைவாக பேசி, தாக்கியதால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்று சுப்புலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து தொண்டி போலீசார் சுப்புலட்சுமியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கை மாற்றி ஆனந்த், சீதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை