ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
ராமநாதபுரம் : மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை -2024 விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டுமைதானத்தில் நேற்று துவங்கியது. செப்.24 வரை போட்டிகள்நடக்கிறது.ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில்முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்க விழாநடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமைவகித்தார். அமைச்சர்ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் வரவேற்றார்.சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து,கைப்பந்து போட்டிகள் நடந்தன. உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதிவிளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, ஹாக்கி,நீச்சல், கூடைப்பந்து, கையுந்து பந்து, கேரம் (ஆ/பெ) போட்டிகள் நடக்கிறது.