உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. ஏப்.23ல் தேரோட்டம் நடக்கிறது.புராண, இதிகாச சிறப்புகளை பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள அலங்கார மண்டபம் அருகே கொடிமரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டது. கொடி பட்டம் ஏற்றப்பட்டவுடன் கொடி மரத்தை சுற்றிலும் தர்ப்பைப் புற்களால் கட்டப்பட்டது. அலங்கார மண்டபத்தில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து விழாக் காலங்களில் 10 நாட்களும் பூத வாகனம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷப வாகனம் உள்ளிட்டவைகளில் இரவு நேரங்களில் நான்கு ரத வீதிகளிலும் உற்ஸவர் அம்பாள் புறப்பாடு நடக்க உள்ளது. ஏப்.22 மாலை 5:30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்க உள்ளது. மறுநாள் ஏப்.23 அதிகாலை 5:00 மணிக்கு மங்கை பெருமாள் குதிரை வாகனத்தில் கோவிந்தன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை