மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது
3 hour(s) ago
கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு
3 hour(s) ago
வியாபாரிகள் கோரிக்கை
4 hour(s) ago
விழிப்புணர்வு முகாம்
4 hour(s) ago
விலையில்லா சைக்கிள் வழங்கல்
4 hour(s) ago
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் ஒரே நாளில் 580 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பு வேலிக்குள் புதைத்தனர்.மன்னார் வளைகுடா கடலில் வாழும் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜன., முதல் மே வரை தனுஷ்கோடி கடலோரத்தில் குழிதோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை வனத்துறையினர் சேகரித்து தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள் புதைத்து வைத்துள்ளனர்.நேற்று தனுஷ்கோடி கடலோரத்தில் 5 ஆமைகள் இட்டுச் சென்ற 584 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பு வேலிக்குள் புதைத்து வைத்தனர். இதுவரை 15 ஆயிரம் ஆமை முட்டைகளை புதைத்து வைத்துள்ளதாகவும், 55 முதல் 60 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கும். இதுவரை 7000 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago