உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்

ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் குழந்தைகளுக்கானமிஷன் வாத்சல்யா திட்டத்தில்ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்விஉதவித் தொகை வழங்க பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டும்என கலெக்டர் விஷ்ணுசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறியிருப்பதவாது:பெற்றோர் இருவரையும் இழந்தகுழந்தைகள் மற்றும்ஒற்றைப் பெற்றோர், பாதுகாவலருடன் தங்கி குடும்பசூழலில் தொடர்ந்து கல்வி பயில மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன்மாவட்டத்தில் ஆண்டிற்கு 66 குழந்தைகளுக்கு தலா மாதம் ரூ.4000 வீதம் நிதி ஒதுக்கீடு செய்து பயன்பெறுகின்றனர்.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் குழந்தைகளுக்கான மிஷன் வாத்சல்யா திட்டம் தொடர்பாக கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்பெறப்பட்டுஇத்திட்டத்திற்கு தகுதி பெற்ற 858 குழந்தைகள் உள்ளனர். எனவே மிஷன் வாத்சல்யா திட்ட விரிவாக்கமாக ஆதரவற்றகுழந்தைகள் நிதி உதவி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாங்க் ஆப்மகாராஷ்டிரா ராமநாதபுரம் கிளையில் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.Ramanathapuram, District Orphan child, Account No: 60488699946, IFSC code: MAHB0002134, MICR Code:623014002 என்ற வங்கி கணக்கிற்குபொதுமக்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி