| ADDED : ஜூலை 16, 2024 11:46 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் பக்தரை தாக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி கோயில் இணை ஆணையரிடம் பா.ஜ., ஹிந்து அமைப்பினர் மனு அளித்தனர்.ஜூலை 15ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பீஹார் பக்தர் நிகில்குமார் 29, தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்ய கோயில் ஊழியர்கள் சரமாரியாக தாக்கியதில் நிகில்குமார் காயமடைந்தார். ராமேஸ்வரம் கோயில் போலீசார் விசாரித்த நிலையில் நிகில்குமார் மற்றும் உறவினர்களை கோயில் ஊழியர்கள் சமரசம் செய்ததால் வழக்கு பதியவில்லை.இந்நிலையில் பக்தர்களை கோயில் ஊழியர்கள் அடாவடியாக தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனால் கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பக்தர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நிகில்குமாரை தாக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ., ஹிந்து முன்னணி, வி.எச்.பி., மக்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பலர் கோயில் இணை ஆணையர் சிவராம்குமாரிடம் மனு அளித்தனர்.