உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய கடல் மீனவ சேமிப்பு நிவாரணத் திட்ட சந்தா தொகை வசூலிப்பதில் தொடர் மோசடி பாதிக்கப்பட்டோர் புகார்

தேசிய கடல் மீனவ சேமிப்பு நிவாரணத் திட்ட சந்தா தொகை வசூலிப்பதில் தொடர் மோசடி பாதிக்கப்பட்டோர் புகார்

திருப்புல்லாணி: தேசிய கடல் மீனவ சேமிப்பு நிவாரணத் திட்டத்திற்கான மாதாந்திர சந்தா தொகை செலுத்துவதில் ஏற்படும் மோசடி மற்றும் குழப்பங்களை தவிர்க்க சந்தா தொகையை சந்தாதாரர்களே நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்துவதற்கு தேவையான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அனுப்பி வருகின்றனர்.திருப்புல்லாணி அருகே அத்தியட்சபுரம் மீனவர் நலவாரிய சங்கத்தில் 1500 ஆண்களும் 734 பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மீனவர்வாழ்வாதாரத்திற்காக அரசு தேசிய கடல் மீனவ மகளிர் சேமிப்பு நிவாரண திட்டத்திற்கான சந்தா தொகை ரூ.1500, மீனவர் நல வாரிய சந்தா தொகை ரூ.20, சேமிப்பு கட்டணம் ரூ.90 உட்பட ரூ.1610 செலுத்தி மீன் துறை பணியாளர்களிடம் ரசீது பெற்றுகொள்ள வேண்டும். இப்பகுதியில் முழுமையான விழிப்புணர்வு இல்லாததால் நீண்ட காலமாக நிறைய குளறுபடிகள் ஏற்பட்டு நோக்கம் போல் வசூல் செய்து வருகின்றனர். இத்திட்டத்திற்காக செலுத்தப்படும் தொகை ரூ.1610 மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ரசீதும் வழங்கப்படுகிறது.ஆனால் ரூ.2000 வரை கூடுதலாக வசூல் செய்வதால் அதிக எண்ணிக்கையில் உள்ள உறுப்பினர்கள் தொகையை தனி நபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். அத்தியட்சபுரத்தைச் சேர்ந்த மகளிர் மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு ஆக., மாதம் மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர்உள்ளிட்ட நிர்வாகிகளின்பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ரூ.1610 வசூல் செய்வதற்கு பதில் ரூ. 2000 வீதம் தொடர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.சந்தா தொகை செலுத்தாத உறுப்பினர்களிடம் உங்களுக்கு அரசிடமிருந்து உரிய சலுகை கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இதுகுறித்த உரிய விழிப்புணர்வு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படாததால் முறைகேட்டிற்கு வழி வகுக்கிறது.இஷ்டத்திற்கு ஆளாளுக்கு உறுப்பினர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பல லட்சங்கள் இதற்கென செலவாகிறது என்றனர். மீனவர் நலவாரியச் சங்க ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ரூ.1610 செலுத்தி ரசீது பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். முறையாக உறுப்பினர்களுக்கு ஒலிபெருக்கி ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது என்றார்.கடந்த ஆண்டு அக்.,11ல் 734 உறுப்பினர்களிடம் ரூ.1610 வீதம் ஏற்கனவே ரூ.11 லட்சத்தி 81 ஆயிரத்து 740 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கட்டாவிட்டால் நடப்பாண்டிற்கு பண பலன் கிடைக்காது எனவே உடனடியாக மீண்டும் இத்தொகை செலுத்த வேண்டும் என அறிவித்ததின் பெயரில் உறுப்பினர்கள் மீண்டும் இப்பணத்தை செலுத்தினர்.மீனவ பெண்களிடம் வசூல் செய்த தொகையை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி