உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செப்.7ல் ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

செப்.7ல் ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில், செப்.,7 விநாயகர் சதுர்த்தி அன்று 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா செப்.,7 ல் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 25 விநாயகர் சிலைகள், ராமநாதபுரம் 40, பரமக்குடி 50, ஏர்வாடி 6, சாயல்குடி 10, கமுதி 10, முதுகுளத்துார் 5, ஆர்.எஸ்.மங்கலம் 6, மண்டபம், வேதாளை பகுதியில் 15, பாம்பன் 10, தங்கச்சிமடம் 6 என 500 இடங்களில் செப்., 7ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.செப்., 8ல் அரசு அனுமதித்த பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு கடல், குளம் மற்றும் நீர் நிலைகளில் சிலைகள் கரைக்கப்படும் என ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை