| ADDED : ஏப் 25, 2024 05:17 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சரக்கு வாகனங்களில் அதிகளவில் முள் சங்குகள் ஏற்றிச் சென்றதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்தில் கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கு, முள் சங்கு, பால் சங்குகளை சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து பூஜிக்கவும், அழகு சாதன பொருட்களாக வடிவமைக்கும் ஆலைகள் பல உள்ளன. இங்கு சங்குகளை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் அனுப்புகின்றனர்.இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள ஆலையில் சுத்தம் செய்யாத சங்குகளை வியாபாரிகள் வாங்கி கீழக்கரை மண்டபத்தில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக விதி மீறி முள் சங்குகளை ஏற்றிக் கொண்டு கீழக்கரை, மண்டபத்திற்கு ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றனர்.இதனால் லாரியில் இருந்து சங்குகள் சாலையில் இடறி விழுந்து பின்னால் வரும் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படவும், பாரம் தாங்காமல் சரக்கு லாரி விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சரக்கு லாரியில் ஏற்றும் சங்குகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.