உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் கைதி உயிரிழப்பு:   போலீசார் மீதான வழக்கு ஆக.30க்கு தள்ளிவைப்பு 

பரமக்குடியில் கைதி உயிரிழப்பு:   போலீசார் மீதான வழக்கு ஆக.30க்கு தள்ளிவைப்பு 

ராமநாதபுரம் : பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்குப் பிறகு நீதிபதி குமரகுரு ஆக.30க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 2012 அக்.2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனில் இறந்தார்.போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.ஓய்வு எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடலநலக்குறைவால் இறந்தார். ஏட்டுகள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கோதண்டம், ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆஜராகினர். விசாரணையை ஆக.30க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை