உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

சிக்கல் : வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க தலைவர் பச்சம்மால் தலைமை வகித்தார். 15 நாள் பணிக்கொடை வழங்கவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 வழங்கவும், பீல்ட் மேன் நியமனம், ஐ.எப்.எஸ்., பணியாளர்களுக்கு உபகரணம் வழங்க வேண்டும், தேவையற்ற காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் சிவாஜி, உப்பு நிறுவன சங்க தலைவர்கள் வடிவேல், முருகவேல், சாமியாடியான் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ