உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / -ராமாதபுரத்தில் புதுபஸ் ஸ்டாண்ட் உட்பட ரூ. 68.82 கோடியில்  வளர்ச்சிப்பணிகள்

-ராமாதபுரத்தில் புதுபஸ் ஸ்டாண்ட் உட்பட ரூ. 68.82 கோடியில்  வளர்ச்சிப்பணிகள்

ரா மநாதபுரம் நகராட்சியில் ரூ.20 கோடியில் புதுபஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் முடிந்துள்ளன. ரூ.6கோடியே 13 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி உட்பட ரூ.68 கோடியே 92 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது என நகராட்சி தலைவர் ஆர்.கே. கார்மேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியள்ளதாவது: ராமநாதபுரத்தில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 2022-23 திட்டத்தில் புது பஸ் ஸ்டாண்டை ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள், 15வது மத்தியக்குழு மானியநிதி ரூ.69 லட்சம் 63 ஆயிரத்தில் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ரூ.11கோடியே 95 லட்சத்தில் கழிப்பறை, வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது. ரூ.6 கோடியே 13 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திரிகப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலைகளை சீரமைத்தல், கழிவுநீர் உந்துநிலையங்களில் புனரமைப்பு பணி என ராமநாதபுரம் நகரில் 68 கோடியே 92 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் முடிவடைந்தும், சில பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை