உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியை சுற்றி கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் கோயிலில் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வடக்கு ரதவீதி வழியாக கோயிலுக்குள் சென்று 22 தீர்த்தங்களில் நீராடி தெற்கு ரத வீதியில் வெளியேறி விடுவார்கள். மீண்டும் கிழக்கு, மேற்கு நுழைவு வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கோயில் நான்கு ரத வீதியில் 150க்கு மேற்பட்ட கடைகள் நடைபாதை, சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லவோ, டூவீலரில் மற்றும் அவசர சிகிச்சைக்கு பக்தர்களை வாகனத்தில் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்த ஆக்கிரம்புகளை அகற்ற பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்த நிலையில், ராமேஸ்வரம் கோயில் வீதியை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை