உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுயநலவாதிகளின் கைகளில் அ.தி.மு.க., அகப்பட்டுள்ளது தினகரன் பேச்சு

சுயநலவாதிகளின் கைகளில் அ.தி.மு.க., அகப்பட்டுள்ளது தினகரன் பேச்சு

முதுகுளத்துார்: அ.தி.மு.க., சுயநலவாதிகளின் கைகளில் தற்போது அகப்பட்டுள்ளது என்று தினகரன் பேசினார்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதுகுளத்துாரில்அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பன்னீர்செல்வத்துடன் ஓட்டு சேகரித்தார். அப்போது தினகரன் பேசியதாவது:தி.மு.க.,வை எதிர்த்து உருவாக்கிய இயக்கம்,எம்.ஜி.ஆர்., ஜெ., கட்டிக்காத்த அ.தி.மு.க., தற்போது சுயநலவாதிகள் கையில் அகப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து விட்டு திரும்பக் கேட்டபோது பதவியை மரியாதையாக ஒப்படைத்தவர். தினகரன் பின்னால் யார்இருக்கிறார்கள் என்று ஏளனம் செய்தனர். இன்று 12 கட்சிகள் கூட்டணியில் உள்ளது. தி.மு.க.,வை எதிர்த்து போராடுகின்ற கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. பிரதமர் மோடி தலைமையில் பன்னீர்செல்வமும், நானும் கைகோர்த்து தி.மு.க.,வை எதிர்த்து போராடுகிறோம். தி.மு.க., -காங்., கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லை. இவர்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூட தெரியாது. தேனியில் என்னை பார்த்து பச்சோந்தி என்று பழனிசாமி கூறியுள்ளார். பச்சோந்தி யார் என்று உங்களுக்கு தெரியும்.பழனிசாமி தான் பச்சை துரோகி. பா.ஜ., இரண்டு பேரும் வேண்டும் என்று விரும்பியதால் தான் பழனிசாமி ஓட்டம் பிடித்துள்ளார்.தற்போது பழனிசாமியால் தேனியில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தாலும் மூன்றாம் இடத்தை பிடிப்பதற்கு கூட படாதபாடு பட வேண்டும். ராமநாதபுரம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். தர்மர் எம்.பி., அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி