உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினத்தில் ஹீப்ரூ கல்வெட்டு கண்டெடுப்பு

பெரியபட்டினத்தில் ஹீப்ரூ கல்வெட்டு கண்டெடுப்பு

பெரியபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில்'ஹீப்ரு' மொழி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பெரியபட்டினம் விவசாயி பாலு தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்கு பழங்கால கல் பயன்படுத்தப்பட்டு வந்தது.மூன்று அடி நீளம், இரண்டு அடி அகலம் கொண்ட இந்த கல்லை வரலாற்று ஆர்வலர் ஹாத்திம் ஆய்வு செய்தார். கல்லில் ஹீப்ரு மொழியில் வார்த்தைகள் இருந்தன.ஹாத்திம் கூறியதாவது: 1946ம் ஆண்டு பெரியபட்டினத்தில் தாவீதின் மகள் மரியம் என்பவர் கல்லறையில் இதே போன்ற ஹீப்ரு மொழி எழுதப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும், யூதக்கோயில் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவிலேயே முதல் யூத கோயில் பெரியபட்டினத்தில் இருந்தது என்பது அந்த கல்வெட்டு மூலம் தெரியவந்தது. அந்த கல்வெட்டு ராமநாதபுரம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது இரண்டாவது கல்வெட்டு. இதில் என்ன எழுதியுள்ளது என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ