மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
8 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
8 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
8 hour(s) ago
திருவாடானை, : திருவாடானை தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்து கால்நடை வளர்ப்புத்தொழில் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் அமைத்து பலர் பயன்பெற்றனர்.அரசின் தொடர் கண்காணிப்பு இல்லாததால் அந்த கூட்டுறவு சங்கங்கள் தேய்ந்து போனது. அவை செயல் இழந்ததால் உறுப்பினர்கள் மீண்டும் தனியாரிடம் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். ஊரணிக்கோட்டை ஆடு வளர்ப்போர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சோனமுத்து கூறியதாவது:திருவாடானை தாலுகாவில் ஊரணிக்கோட்டை, பாண்டுகுடி, திருவெற்றியூர் உள்ளிட்ட 11 ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. 2023 ல் அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டது. தற்போது எதுவும் செயல்படவில்லை. உறுப்பினர்களுக்கு கடன் வழங்க சங்கங்களில் நிதி இல்லை.ஆடு வளர்ப்புத்தொழிலை ஊக்கப்படுத்தவும், உறுப்பினர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் கடன் கிடைக்கவும் கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் இணைந்து மீண்டும் ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களை துவங்கி போதிய நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago