மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
4 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
4 hour(s) ago
தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் பாய்ந்து வீணாகிறது.தொண்டி-எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மருங்கூர் விலக்கு ரோட்டில் பல அடி துாரத்துக்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் நேரத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகளவு தண்ணீர் வெளியேறி ரோட்டில் வீணாகிறது. அதிகளவு குடிநீர் வெளியேறுவதால் மருங்கூர், தீர்த்தாண்டதானம், பூந்தோட்டம், ஏந்தவயல், மாணவநகரி, பத்திரன்வயல், அம்பேத்கர் நகர், எஸ்.பி.பட்டினம் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோடும் சேதமடைகிறது. வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குழாயை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
4 hour(s) ago
4 hour(s) ago