உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயற்கை தின்பண்டங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு

செயற்கை தின்பண்டங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு

சாயல்குடி, : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக நிறமூட்டப்பட்ட செயற்கை தின்பண்டங்களை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.முன்பு இயற்கையாக கிடைக்கும் நெல்லிக்காய், மாங்காய், கொடுக்காப்புளி, இலந்தை, கொய்யா உள்ளிட்ட பழவகைகளும், கடலை மிட்டாய், சீடை, முறுக்கு, மிச்சர், கருப்பட்டி, பேரிச்சம்பழம் உள்ளிட்ட தின்பண்டங்களையும் சாப்பிட்டு வந்த காலங்கள் மாறிப் போய் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் துரித வகை செயற்கை தின்பண்டங்களை உண்ணும் போக்கு அதிகரித்து வருகிறது.ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை உண்பதால் மாணவர்களுக்கு வயிற்று வலி, அலர்ஜி உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை