உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் இன்று கோயிலுக்கு திரும்புகிறார்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் இன்று கோயிலுக்கு திரும்புகிறார்

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் இன்று பெருமாள் கோயிலை அடைகிறார்.எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழா மே 22ல் துவங்கி நடக்கிறது.பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கி குதிரை வாகனம், சேஷ, கருட, அனுமன் வாகனங்களில் அருள் பாலித்தார்.நேற்று இரவு 7:00 மணிக்கு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு வாண வேடிக்கைகளுடன் வைகையில் இருந்து புறப்பாடாகினார்.இன்று காலை 10:00 மணிக்கு மீண்டும் திருக்கோயிலுக்கு திரும்புகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை